நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்: ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ₹77.50 லட்சம் நிதியுதவி வழங்...
Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026
வரலாற்று உச்சம்... நினைத்துப் பார்க்காத உச்சங்களைத் தாண்டி வருகிறது தங்கம் விலை.
நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் ஆசையாக இருந்தது போய்... இப்போது அச்சமாக மாறி வருகிறது.
வருகிற 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உள்ளது. அதில் வரும் அறிவிப்பு ஏதேனும் இந்தியாவில் தங்கம் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.

"பொதுவாக, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்தால், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது உயர்ந்து வரும் தங்க விலைக்கு காரணம் உலக அளவிலான சந்தையின் தாக்கம்.
அதனால், பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்தால் கூட, அது இந்தியாவில் தற்காலிகமாகத் தான் தங்கம் விலையைக் குறைக்கும்.
இன்னொரு பக்கம், தங்கம் விலை உயர்விற்கு இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் ஒரு காரணம்.
ஆக, உலக அளவில் நிலைத்தன்மை வர வேண்டும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைய வேண்டும். அப்போது தான் தங்கம் விலை நிலையாகும்".



















