செய்திகள் :

`தீயில் எரிந்தது விவசாயி மட்டுமல்ல; தமிழக சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பும்தான்' - எடப்பாடி பழனிசாமி

post image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.

இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்

'லட்சக்கணக்கில் முறைகேடு அம்பலம்? கிராமசபை கூட்டத்தில் கேள்விகளால் துளைத்த மக்கள்!' - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் 77 -ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26 - ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிராஜ் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்' தொகுதியைப் பெற விசிக ஜரூர்! - திமுக-வின் கணக்கு என்ன?!

தங்களுக்கு சாதகமான தொகுதி என்ற அடிப்படையில் அரூரை குறிவைத்து சிபிஎம், தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், அத்தொகுதியை பெற்றே தீர வேண்டும் என்ற இலக்கோடு விசிக-வும் காய் நகர்த்தி வருவது, திமுக கூட்டண... மேலும் பார்க்க