செய்திகள் :

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மலைமீது ஏற வனத்துறைத் தடை விதித்திருக்கிறது.

இந்த நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையைமீறி மலை உச்சிக்கு சென்று வந்தனர். மேலும், இருவரும் மலை ஏறிச் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு வைரலாகி, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினரின் கவனத்துக்குச் சென்றது.

நடிகை அர்ச்சனா

இதையடுத்து, தடையை மீறி தீபமலை மீது ஏறிய நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண்பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர், வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரையும் அழைத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அர்ச்சனாவும், அருண்பிரசாத்தும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தனர்.

மேலும், இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், `மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பினர். வனத்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போட்டோ, வீடியோக்களையும் உடனடியாக நீக்கினார் நடிகை அர்ச்சனா.

இளம் பெண் பாலியல் வன்கொடுமை; சிக்கிய மூவர் - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம்

சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது ச... மேலும் பார்க்க

`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மதுப... மேலும் பார்க்க

பாராமதி விமான நிலையம்: அடிக்கடி VIP-க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட வசதி இல்லாத நிலை!

பாராமதி விமான நிலையத்தின் ஈடுதளம் அருகே நேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதிச்சடங்கில் பங்கேற... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர்; டீசல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 47). இவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்குத் திருமணமாகி பாண்டீஸ்வர... மேலும் பார்க்க

``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதியில் நெல்லை மக்கள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திரு... மேலும் பார்க்க