"என் கல்யாணத்தை பத்தி யாராச்சும் கேட்டா Irritating-ஆ இருக்கு" - நடிகை மும்தாஜ் B...
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் - நடிகர்கள் யார் யார்?
`தனுஷ் தனது மகன் யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்யவிருக்கிறார். அவரே டைரக்ட் செய்யப் போகிறார். இதற்காகத்தான் திருப்பதி சென்று வந்திருக்கிறார்' என்று சமூக வலைதளங்களில் தகவல் ஓடுகிறது. தவிர இன்று மாலை தனுஷின் D 55 படத்தின் அப்டேட் வெளியாகிறது.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர'வின் போஸ்ட் புரொக்டஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'டி 55' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை தனுஷே தயாரிக்கிறார். பாலிவுட்டில் 'தேரே இஷ்க் மெய்ன்' படப்பிடிப்பின் போதே தனுஷை அடுத்து இயக்கப் போவது ராஜ்குமார் பெரியசாமியா அல்லது 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்துவா என இருவரின் பெயரும் மாறி மாறி வந்து கொண்டிருந்த நிலையில் ராஜ்குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாது.
இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது. 'டி 55'ன் நாயகியாக சாய் பல்லவியிடம் பேசி வந்தனர். 'மாரி 2'வில் தனுஷ் - சாய் பல்லவி கூட்டணியின் 'ரவுடி பேபி' பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரிட் பாடலாகும். இப்போது மீண்டும் அந்த காம்போ வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி 'அமரன்' படத்தில் சாய் பல்லவிக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். ஆகையால் 'டி 55' படத்திலும் அப்படி வலுவான ஹீரோயின் ரோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. மெயின் ரோலில் வருகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது.

சரி, யாத்ரா விஷயத்திற்கு வருவோம். யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்யும் திட்டம் தனுஷுக்கு இருப்பது நிஜம் தானாம். ஆனால் தனுஷுக்கு அடுத்தடுத்து கைவசம் படங்கள் இருக்கிறது. தமிழரசன் பச்சமுத்துவின் படத்தை முடித்துவிட்டு, ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருகிறார். இன்னொரு பக்கம் யாத்ராவும் ஹீரோவுக்கு தயாராகி கொண்டிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னால் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பது தனுஷின் வழக்கம். அப்படித்தான் இப்போது திருப்பதி சென்று வந்தார்.
'டி55' படப்பிடிப்பு அனேகமாக பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கலாம் என்கிறார்கள். இதற்கிடையே மகனுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தனுஷ் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
















