செய்திகள் :

Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி

post image

விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யிருக்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்படம் மவுனப் படமாக (silent movie) உரு​வாகி ​இருக்கிறது.

'காந்தி டாக்ஸ்’
'காந்தி டாக்ஸ்’

இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளியாகும் இப்​படத்​தின் மேக்​கிங் வீடியோ ஏற்​கெனவே வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருந்தது.

வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி 'Gulte Pro' என்ற தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், '' 'காந்தி டாக்ஸ்' ஒரு சிறப்பானப் படம் மட்டும் அல்ல. மாறுபட்ட ஒரு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு திரைப்படம்.

இந்த படம் வழக்கமாக வெளியாகும் படத்தைப்போல் அல்லாமல் மவுனப் படமாக இருப்பதால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கவலை ஆரம்பத்தில் படக்குழுவினருக்கு ஒரு கவலை இருந்தது.

'காந்தி டாக்ஸ்’
'காந்தி டாக்ஸ்’

பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு படத்தைத் திரையிட்டு காண்பித்தோம். அவர்களிடமிருந்து கிடைத்த நல்ல கருத்துகள் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போது படம் ஹிட் ஆக வேண்டும் என்பதே படக்குழுவினரின் விருப்பமாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" - விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப்... மேலும் பார்க்க

"எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா?" - விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'வித் லவ்'.இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ... மேலும் பார்க்க

'இவங்க‌ பெண் மாதிரி நடந்துக்கிறதில்ல‌!' - திரைப்பட‌ தயாரிப்பாளர் சங்க புகார்; காட்டமான மகளிர் ஆணையம்

பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புக... மேலும் பார்க்க

``என் உழைப்பிற்கு மதிப்பளித்த தேசம்" - குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா!

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் குடியரசு... மேலும் பார்க்க

Arijit Singh: ``இதோடு நான் விடைபெறுகிறேன்" - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாடகர் அரிஜித் சிங்

பாடகர் அரிஜித் சிங் என்ற பெயர் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், அவரின் பாடலை ஒருமுறையாவது கேட்காமல் இருந்திருக்க முடியாது.உதாரணமாக சூர்யாவின் 24 படத்தில் ''நான் உன் அழகினிலே" பாடல் ஆல... மேலும் பார்க்க