செய்திகள் :

ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" - விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்

post image

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று (ஜன. 29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விக்னேஷ் கார்த்திக், "படத்தின் கதாநாயகன் அஸ்வினை பற்றி கூற வேண்டும் என்றால் கடந்த காலகட்டத்தில் அவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ’கதை கேட்கும் போது தூங்கி விடுவேன்’ என பேசி இருந்தார்.

 ‘ஹாட்ஸ்பாட் 2’
‘ஹாட்ஸ்பாட் 2’

அப்போது எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது. அதை வெளிப்படையாகவும் சமூக வலைதளங்களில் பேசியிருந்தேன்.

இருந்தப் போதிலும் இந்தக் கதையினை யோசிக்கும் போது அஸ்வின் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதால் அவரிடம் கதை சொல்ல வேண்டும் என சென்றேன்.

கதை கூற செல்லும் போதே உங்களைப் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்திருக்கிறேன் என்று நானே அவரிடம் கூறிவிட்டேன்.

ஏனெனில் இது குறித்து வேறு யாராவது அவரிடம் கூறினால் எங்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் நானே அவரிடம் தெரிவித்து விட்டேன்.

படப்பிடிப்பு தளத்தில் அஸ்வினை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருந்தது. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்தார். நிச்சயம் அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார் அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அஸ்வின்
அஸ்வின்

இதனைத்தொடர்ந்து ‘ஹாட்ஸ்பாட் 2’ மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த அவர், " சமூக வலைதளங்களில் அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, படம் தவறான படம், பெண்களுக்கு எதிராக இருக்கிறது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது சிறிய காட்சியை பார்த்து விமர்சனம் செய்யாதீர்கள். முழு படத்தையும் பார்த்து அதில் உங்களுக்கு தவறு இருந்தால் தாராளமாக தெரிவியுங்கள். விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, எனக்கு பிடித்தது போல் திரைப்படம் எடுப்பதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

"எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா?" - விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'வித் லவ்'.இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ... மேலும் பார்க்க

'இவங்க‌ பெண் மாதிரி நடந்துக்கிறதில்ல‌!' - திரைப்பட‌ தயாரிப்பாளர் சங்க புகார்; காட்டமான மகளிர் ஆணையம்

பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புக... மேலும் பார்க்க

``என் உழைப்பிற்கு மதிப்பளித்த தேசம்" - குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா!

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் குடியரசு... மேலும் பார்க்க

Arijit Singh: ``இதோடு நான் விடைபெறுகிறேன்" - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாடகர் அரிஜித் சிங்

பாடகர் அரிஜித் சிங் என்ற பெயர் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், அவரின் பாடலை ஒருமுறையாவது கேட்காமல் இருந்திருக்க முடியாது.உதாரணமாக சூர்யாவின் 24 படத்தில் ''நான் உன் அழகினிலே" பாடல் ஆல... மேலும் பார்க்க

ஜனநாயகன்: விஜய் பட சென்சார் வழக்கு; சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்! | Live Updates

ஜனநாயகன் சென்சார் வழக்கு விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்... மேலும் பார்க்க