செய்திகள் :

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

post image

சிலம்பமே சுவாசம்!

ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது.

1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டாக சிலம்பம் பழகத் தொடங்கிய பழனிவேலுக்கு, அதுவே வாழ்நாள் சுவாசமாக மாறும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கலையின் மீது கொண்ட தீராத காதலால், வெறும் பயிற்சியாளராக மட்டும் நின்றுவிடாமல், இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆசானாக உருவெடுத்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பழனிவேல்

உலக மேடைகளில் சுழன்ற சிலம்பம்

இந்திய எல்லைகளைத் தாண்டி, துபாய் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பழனிவேலின் சிலம்பக் கம்புகள் சுழன்றுள்ளன. அங்கு நடந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றதுடன், வெளிநாட்டவர்களுக்கும் நம் மண்ணின் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து அசத்தியவர் இவர்.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல வெற்றிகளைக் குவித்துள்ள இவருக்கு, 2004-இல் சிறந்த இளைஞருக்கான விருதும், 2012-இல் புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருதும் தேடி வந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் வென்று சாதனை படைத்தார்.

இலவசப் பயிற்சியும்... 3,000 மாணவர்களும்!

`கலை என்பது வியாபாரம் அல்ல' என்பதை உரக்கச் சொல்லும் பழனிவேல், `மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக் கலை வளர்ச்சி கழகம்' என்ற கல்விச்சாலையை நிறுவி, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் வித்தை கற்றுத் தேர்ந்துள்ளனர். இதுகுறித்துப் பேசும் பழனிவேல், ``இந்த விருதை சிலம்பக் கலைக்கு கிடைத்திருக்கும் கௌரவமாக நினைக்கிறேன். அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பழனிவேல்

`பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்...’

கிராமப்புற கலை மற்றும் விளையாட்டுகளில் சிலம்பம் மிக முக்கியமானது. அதனை அழியாமல் வளர்த்து வருகிறோம். மாணவர்களின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமாகாது. இந்த நாட்டுப்புறக் கலைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டுமானால், பள்ளிகளில் அதனை கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்றார்.

"நம் பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே எனது லட்சியம்" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்தச் சிலம்ப நாயகன். 32 ஆண்டுகால அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள இந்த 'பத்மஸ்ரீ' விருது, புதுச்சேரி மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவ... மேலும் பார்க்க

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க

'விஜய் சந்திப்பு குறித்து கேள்வி கேட்காத ராகுல்' டெல்லியில் நடந்தது என்ன? - பிரவீன் சக்கரவர்த்தி

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும... மேலும் பார்க்க

அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகச் சாடும் அமெரிக்கா

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.இந்த நிலையில்தான்,... மேலும் பார்க்க

"Helicopter விபத்து குறித்த பய‌த்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற‌ அரசியல்" - விசிக MLA பாலாஜி பேட்டி

'லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல ... மேலும் பார்க்க