செய்திகள் :

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

post image

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவார் எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். அதிகமான நேரங்களை தொண்டர்களுடனும், கட்சிப்பணியிலும் ஈடுபடுத்திக்கொள்வார். அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி தனது சித்தப்பா சரத் பவாரிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

பாராமதியின் செல்லப்பிள்ளையாகவும், புனேயில் வலுவான சக்தியாகவும் விளங்கிய அஜித் பவார் பொதுவாக ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார். அவர் கண்கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

விபத்து நடந்த இடம்

குறிப்பாக சன்கிளாஸ் வகைகளில் மேபேக் ரகங்களில் இருந்து வழக்கமான ரே பான் வரை பலதரப்பட்ட பிராண்ட் சன்கிளாஸ்கள் அஜித்பவாரிடம் இருந்தது. லென்ஸ்கள் எப்பொழுதும் தடிமனாகவும், சாய்வாகவும், சில சமயங்களில் மென்மையானதாகவும், பெரும்பாலும் தடிமனான பிரேம்களுடன் இருக்கும்.

கைக்கடிகாரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதிலும் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். எங்கு செல்கிறோம் என்பதை பொறுத்து தன் தோற்றத்தை மாற்றிக்கொள்வார். சட்டசபை கூட்டத் தொடர்களிலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சஃபாரி சூட் மற்றும் பூட்ஸ் அணிவது வழக்கம். அவர் பிரதமரைச் சந்திக்க அல்லது நிதியமைச்சராக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் புது டெல்லிக்குச் செல்லும் போது, தனது பாரம்பரிய குர்தா பைஜாமாக்களைத் தவிர்த்துவிட்டு வழக்கமான பார்மல் உடைகளை அணிவது வழக்கம்.

புகையிலை, மதுவை வெறுத்தார்

சரத் பவார் புகையிலை பயன்படுத்தி வந்த நிலையில் அஜித் பவார் அதிலிருந்து விலகியே இருந்தார். சிறு வயதிலேயே அஜித் பவார் மது மற்றும் புகையிலையிலிருந்து விலகியே இருந்தார். அவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் புகையிலை மெல்லுவதை நிறுத்துமாறு எச்சரித்தார்.

அஜித் பவார் எப்போதும் தானும், தன்னை சுற்றி இருக்கும் இடமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடியவர். சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதும், பணியிடமும் வீடும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதும் பிறவிப் பண்புகளாகும் என்று எப்போதும் கூறுவார். ஒரு முறை அஜித் பவார் தனது பேட்டியில்,"பள்ளியில் இருந்தே புத்தகங்களை அலமாரியில் அழகாக வைப்பேன். உடைகளை சரியாக மடித்து, காலணிகளை அதன் குறிப்பிட்ட இடத்தில் வைப்பேன். எனது சைக்கிளை தவறாமல் சுத்தம் செய்வேன்.

மனைவியுடன் அஜித் பவார்

எனது முதல் பைக் 1965 பதிவு எண் கொண்ட ராஜ்தூத். எனக்கு பேனாக்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் சன்கிளாஸ்கள் பிடிக்கும். விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்தேன். அதிர்ஷ்டவசமாக என்னால் அவற்றை வாங்க முடிகிறது. ஏன் அவற்றை விரும்புகிறேன் என்று பரமேஷ்வருக்கு மட்டுமே தெரியும்" என்று கூறினார்.

அஜித் பவாரின் சுத்தம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஹசன் முஸ்‌ரீப் கூறுகையில், ''நாங்கள் 2004-ல் முதல்முறையாக அமைச்சர்கள் ஆனோம், அப்போதிருந்து அவரை நான் அறிவேன். அவர் தூய்மையில் மிகவும் கண்டிப்பானவர். அவர் உங்களைச் சந்தித்தால் அழுக்குத் துணிகளையோ அல்லது தூசியோ கிடப்பதைக் கண்டால், அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். அஜித் பவாரை இதற்காகவே ஒருமுறை எனது வீட்டிற்கு அழைப்பதைத் தவிர்த்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி பெட்டியின் மேல் அல்லது சோபாவின் பின்னால் தூசி இருந்தால் கூட அதை கவனிப்பார். மேலும், அவர் கட்டிடக்கலை குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் கட்டமைப்பு மற்றும் அமைப்புகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்," என்று கூறினார்.

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர... மேலும் பார்க்க

பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்

பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்... மேலும் பார்க்க

கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜ... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க

`கலை என்பது வியாபாரமல்ல.!’ - பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி சிலம்பக் கலைஞர் பழனிவேல்

சிலம்பமே சுவாசம்!ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. 1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டா... மேலும் பார்க்க