சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்' தொகுதியைப் பெற விசிக ஜரூர்! - திமுக-வின் கணக்கு என...
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2025: ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்வுடன் தொடங்கிய விழா! | Live
ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்வு!

தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் நாணயம் விகடன், 9-வது ஆண்டாக நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2025 நிகழ்ச்சியை இன்று (29-ம் தேதி) சென்னையில் வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக, 'தமிழகத்தில் ரீடெய்ல் புரட்சி மற்றும் வருங்காலப் பாதை' (Retail Revolution in Tamil Nadu and the Road Ahead) ஆகிய தலைப்பிலான சிறப்பு விவாத அரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி ரீடெய்ல் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக, திரு.ஆனந்த பத்மநாபன் (ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்), திரு.ரமேஷ் (போத்தீஸ்), திரு.முருகன் (டார்லிங் எலெக்ட்ரானிக்ஸ்), திரு.சௌந்தர கண்ணன் (நாகா) சார்பாக கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.


















