'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!
'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்
வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது.

இதற்கு வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஃபேன்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பது காரணமாக கூறப்பட்டது.
இந்தியாவில் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இதனால், வங்கதேச அணி வருகிற டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுவதாவது…
“நாங்கள் டி-20 உலகக் கோப்பையில் கலந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவில் நடக்க உள்ள போட்டிகளை இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் எங்களுக்கு அச்சுறுத்தல் என்பது உண்மை தான். இதை நாங்கள் யூகத்தின் அடிப்படையில் கூறவில்லை.
எங்களுக்கு உலகக் கோப்பை விளையாட வேண்டும்… ஆனால், இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லை.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தொடர்ந்து பேசுவோம்.

முஸ்தஃபிசுர் விஷயம் தனிப்பட்ட விஷயம் அல்ல. இந்தியா தான் அதில் முக்கியமாக முடிவு எடுத்தது.
இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துவிட்டது.
உலக கிரிக்கெட்டின் புகழ் இப்போது எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அதன் புகழ் மங்கிக் கொண்டே போகிறது.
அடுத்து கிரிக்கெட் ஒலிம்பிக்ஸிற்கு செல்லப்போகிறது. எங்களைப் போன்ற ஒரு நாடு அதில் கலந்துகொள்ளவில்லை என்றால், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு தான் தோல்வி”. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



















