IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" - கோலி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோதராவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
சிறப்பாக விளையாடி விராட் கோலி 93 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விராட் கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது பிடிக்கவில்லை. இதே விஷயம் தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது.
ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.!




















