செய்திகள் :

T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" - பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம்

post image

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.

அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Ind vs Pak - இந்தியா vs பாகிஸ்தான்
Ind vs Pak - இந்தியா vs பாகிஸ்தான்

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல.

ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று சொல்வது நியாயம் இல்லை.

இது நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது.

ஐசிசி

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

K.L Rahul: "கிடைக்கும் விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும்"- ஓய்வு குறித்து கே.எல். ராகுல்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் கெவின் பீட்டர்சன் உடனான நேர்காணலில் ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார். நேர்காணலில் பேசிய கே.எல்.ராகுல், "ஓய்வு குறித்து நான் யோசித்திருக்கிறேன். என்னைப் ... மேலும் பார்க்க

T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் திறந்த ரோஹித்

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் தொடக்க நாளில் அமெரிக... மேலும் பார்க்க

BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! - Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video

பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்ற... மேலும் பார்க்க

IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" - வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோத... மேலும் பார்க்க

IPL: கிளம்பிய எதிர்ப்புகள்; அறிவுறுத்திய பிசிசிஐ - வங்கதேச வீரரை விடுவித்த கொல்கத்தா அணி!

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவ... மேலும் பார்க்க

IPL: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்; வங்கதேச வீரரை KKR-லிருந்து விடுவிக்க அறிவுறுத்திய பிசிசிஐ

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது.அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள... மேலும் பார்க்க