செய்திகள் :

Aazhikondaan: 'ராஜேந்திர சோழனின் சாதனைகள் இனி ஆங்கிலத்தில்' - 16 வயது மாணவர் எழுதிய வரலாற்று நாவல்!

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், ரௌனக் ஷிவ் (புனைப்பெயர்: அந்துவன்) எழுதிய "Aazhikondaan – The Conqueror Of Oceans (Part - 1)" என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. 

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலால் ஈர்க்கப்பட்ட ரௌனக், அதன் தொடர்ச்சியாக ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிகளை மையமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார்.

கல்கியின் பாத்திரப்படைப்புகளை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், காலமான பின்னரும் தனது படைப்பாற்றலால் அடுத்தடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இலக்கிய ஆளுமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

ரௌனக் ஷிவ்
ரௌனக் ஷிவ்

பெங்களூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவரான ரௌனக், ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு, வரலாற்று ஆய்விலும் ஆர்வம் காட்டி வருகிறார். வெறும் கற்பனையாக மட்டுமில்லாமல், கல்வெட்டு ஆதாரங்களுடன் கூடிய ஒரு ‘உண்மை கலந்த கற்பனை’ (Factual Fiction) நாவலாக இதனை அவர் எழுதியுள்ளார்.

16 வயதில் வரலாற்றுப் பின்னணியில் இவர் எடுத்துள்ள இந்த முயற்சி, ராஜேந்திர சோழனின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு ஆங்கிலத்தில் கொண்டு செல்லும் நோக்கில் அமைந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை பேராசிரியர் டாக்டர் G. தெய்வநாயகம் வெளியிட, பிரபல எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா பெற்றுக்கொண்டார்.

மின்னூலை (E-Book) எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட, ஒலிப்புத்தகத்தை (Audiobook) மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் சிவா ஆனந்த் வெளியிட்டார். வரலாற்று ஆய்வாளர் டாக்டர் K.V.S. மருது மோகன் சிறப்புரையாற்றினார்.

வரலாற்றுப் புனைவு இலக்கியத்தில் ரௌனக் காட்டியுள்ள ஆர்வத்தையும், நாவலில் அவர் அமைத்துள்ள வசனங்களையும் விருந்தினர்கள் வெகுவாகப் புகழ்ந்தனர். அதேநேரம், தங்களின் அனுபவத்திலிருந்து சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினர்.

Aazhikondaan – புத்தக வெளியீட்டு விழா
Aazhikondaan – புத்தக வெளியீட்டு விழா

விழாவில் ரௌனக்கின் பெற்றோர் அவருக்கு அளித்த ஊக்கமும் ஆதரவும் முக்கியமாகப் பேசப்பட்டன. ஒரு இளம் படைப்பாளியின் தனித்திறனை அடையாளம் கண்டு, அதனை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வளவு அவசியமானது என்பதைச் சிறப்பு விருந்தினர்கள் சுட்டிக்காட்டினர்.

இளம் படைப்பாளிகளின் தனித்துவமான முயற்சிகளை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் புஸ்தகா (Pustaka) நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொரு கரமும் ஒரு புதிய உலகத்தைப் படைக்கிறது. ஆய்வும் ஆர்வமும் இணையும்போது, வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்த நூல் வெளியீட்டு விழா ஒரு சான்று.

Book Fair: 20 லட்சம் வாசகர்கள் வருகை; 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை; சென்னை புத்தகக்காட்சியில் சாதனை

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பாபாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 49-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.இந்த ஆண்டு 'இ... மேலும் பார்க்க

``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்

சென்னை 49-வது புத்தக திருவிழாவில் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் குவிந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபல மொழிப்பெயர்பாளர் அரவிந்தன் அவர்களை சந்தித்து மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள் குறித்து பேசினோம். அப்... மேலும் பார்க்க

Book Fair: "லாரியில‌ கொண்டு போனோம்" - ரூ. 1.5 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கிய பிக்பாஸ் தினேஷ் அம்மா

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளது திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் பென்னிங்டன் நூலகம்.ஆங்கிலேயர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த... மேலும் பார்க்க

Book Fair: சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெறும் அம்பேத்கர் நூல்கள்! - ஒரு பார்வை

நந்தனத்தில் நடந்து வரும் சென்னை 49-வது புத்தகத் திருவிழாவில் அம்பேத்கரை பற்றிய புத்தகங்கள் இளம் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்த அம்பேத்கரைப் பற்றிய புத்தகங... மேலும் பார்க்க

`முதலீட்டில் அவசரம் கூடாது' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கும் முதலீடு சார்ந்த புத்தகங்கள்!

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்... மேலும் பார்க்க

"அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன" - ஷாலின் மரியா

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இன்று காலச்சுவடு பதிப்பக அ... மேலும் பார்க்க