செய்திகள் :

Book Fair: 20 லட்சம் வாசகர்கள் வருகை; 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை; சென்னை புத்தகக்காட்சியில் சாதனை

post image

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பாபாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 49-வது சென்னை புத்தகக் காட்சி நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.

இந்த ஆண்டு 'இலவச அனுமதி' என்ற முடிவால், கடந்த ஆண்டைவிட வாசகர்களின் வருகை 50% வரை அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

49-வது புத்தகக் காட்சி
49-வது புத்தகக் காட்சி

13 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 15 முதல் 20 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி புத்தகங்களில், சுமார் 40% முதல் 50% வரை (சுமார் 40 முதல் 50 லட்சம் புத்தகங்கள்) விற்பனையாகியுள்ளன.

விற்பனையான புத்தகங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அதிக அளவில் விற்பனையாகின.

இது குறித்து பாபாசி உறுப்பினர் சங்கர் கோமதிநாயகம், ``கடந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வந்திருந்தனர். உண்மையான விற்பனை அளவு இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், வைக்கப்பட்டிருந்த 1 கோடி புத்தகங்களில் 40% விற்பனையானதாக கூறப்படுகிறது.

ஒரு புத்தகத்திற்குச் சராசரியாக ரூ.100 என விலை நிர்ணயித்தாலும்கூட, விற்பனை சுமார் 40 கோடி ரூபாயாக இருக்கும். உண்மையான தொகை இதைவிட அதிகமாக இருக்கலாம்" என்றார்.

புத்தகக் கண்காட்சி
புத்தகக் கண்காட்சி

புத்தகத் திருவிழா குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், ``டிஜிட்டல் யுகத்திலும் இவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பது ஆரோக்கியமான அறிகுறி. அடுத்த ஆண்டு பபாசியின் பொன் விழா என்பதால், சர்வதேசப் பதிப்பகங்களை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், புத்தகத் திருட்டு மற்றும் போலிப் பிரதிகளைத் தடுக்க, 2027-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை புத்தகக் கண்காட்சி நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று பதிப்பாளர்களுக்கெனப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்

சென்னை 49-வது புத்தக திருவிழாவில் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் குவிந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபல மொழிப்பெயர்பாளர் அரவிந்தன் அவர்களை சந்தித்து மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள் குறித்து பேசினோம். அப்... மேலும் பார்க்க

Book Fair: "லாரியில‌ கொண்டு போனோம்" - ரூ. 1.5 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கிய பிக்பாஸ் தினேஷ் அம்மா

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளது திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் பென்னிங்டன் நூலகம்.ஆங்கிலேயர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த... மேலும் பார்க்க

Book Fair: சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெறும் அம்பேத்கர் நூல்கள்! - ஒரு பார்வை

நந்தனத்தில் நடந்து வரும் சென்னை 49-வது புத்தகத் திருவிழாவில் அம்பேத்கரை பற்றிய புத்தகங்கள் இளம் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்த அம்பேத்கரைப் பற்றிய புத்தகங... மேலும் பார்க்க

`முதலீட்டில் அவசரம் கூடாது' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கும் முதலீடு சார்ந்த புத்தகங்கள்!

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்... மேலும் பார்க்க

"அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன" - ஷாலின் மரியா

வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இன்று காலச்சுவடு பதிப்பக அ... மேலும் பார்க்க