செய்திகள் :

BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! - Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video

post image

பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று (ஜன.16) நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னரின் சிட்னி தண்டர் மற்றும் ஹென்றிக்ஸின் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

பிக் பேஷ் லீக் தொடரில்...
பிக் பேஷ் லீக் தொடரில்...

முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்திருந்தது.

சேஸிங்கை தொடங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம் இருவரும் களமிறங்கினர்.

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஸ்மித் அதிரடியாக ஆடிய நிலையில் பாபர் அசாம் மெதுவாக ஆடினார்.

அதிலும் 11-வது ஓவரில் 3 பந்துகளில் பாபர் அசாம் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் கோபமடைந்த ஸ்மித் அந்த ஓவரின் கடைசி பந்தில் பாபர் அசாம் சிங்கிள் எடுக்க அழைத்தப்போது மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அடுத்த ஓவரை தானே சந்தித்துக் கொள்கிறேன் என்று ஸ்மித் கூறிவிட்டார்.

ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்
ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்

இதைத் தொடர்ந்து அடுத்து ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து 32 ரன்கள் குவித்தார்.

இறுதியாக ஆட்டம் இழந்து வெளியே சென்ற பாபர் அசாம் பவுண்டரி லைனை பேட்டால் அடித்து விட்டு கோபமாக உள்ளே சென்றார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டீவ் ஸ்மித் வெறும் 42 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சிட்னி சிக்சர்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" - வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோத... மேலும் பார்க்க

IPL: கிளம்பிய எதிர்ப்புகள்; அறிவுறுத்திய பிசிசிஐ - வங்கதேச வீரரை விடுவித்த கொல்கத்தா அணி!

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவ... மேலும் பார்க்க

IPL: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்; வங்கதேச வீரரை KKR-லிருந்து விடுவிக்க அறிவுறுத்திய பிசிசிஐ

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது.அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள... மேலும் பார்க்க

Khawaja: ``இவை என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்கொண்ட அதே இனவெறிதான்" - ஓய்வுபெறும் ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வ... மேலும் பார்க்க

Damien Martyn: கோமாவில் டேமியன் மார்ட்டின்; ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்ட... மேலும் பார்க்க

Vijay Hazare Trophy: வரலாற்று சாதனை படைத்த பீகார் அணி; மாஸ் காட்டிய சூர்யவன்ஷி

விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில... மேலும் பார்க்க