செய்திகள் :

`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' - சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

post image

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், "அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்று சொன்னார். ஆனால் இவர் ஒரு படி மேலே போய், 'உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்' என்கிறார். எனக்கு 'பிரபலமான நடிகை ஒருவர் வேண்டும்' என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா?" என்று நடிகையின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

சி.வி.சண்முகத்தின் அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பெண்கள், குறிப்பாக நடிகைகள் யாருடைய சொத்தும் கிடையாது. ஒரு நடிகையின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவதூறுகளுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருவியோ கிடையாது.

ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை கேலி செய்வதும் அல்லது ஒரு கருத்தை நிரூபிக்க முயல்வதும், பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையுமே வெளிப்படுத்துகிறது. இதுவே போதும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணிடமிருந்தே பிறக்கிறார். ஒரு நடிகையைப் பற்றி சாதாரணமாகக் கருத்து தெரிவிக்கும் முன் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், இதே உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் நீங்கள் இதேபோல் பேசுவீர்களா என்று?

ஒரு நடிகை பொது வாழ்வில் அறியப்பட்டவராக இருக்கலாம், ஆனால் அவர் பொதுச்சொத்து அல்ல. மற்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு நீங்கள் அளிக்கும் அதே மரியாதையை பெண் நடிகைகளுக்கும் கொடுங்கள்.

குஷ்பு
குஷ்பு

இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்பவர்கள், தாங்கள் பேசும் பெண்ணுக்கு அவமானத்தை தேடித்தருவதில்லை. மாறாக, தங்களுடைய குறுகிய மனப்பான்மையையும், தவறான வளர்ப்பையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையுமே வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். இது வெறும் அவமரியாதை மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம்" என, சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! - மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட ... மேலும் பார்க்க

'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவ... மேலும் பார்க்க

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்...அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி அரவக்குறிச்சி. டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுத... மேலும் பார்க்க

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட... மேலும் பார்க்க

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் இறங்கப் போவது யார்? பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவை நிறுத்த ஆலோசனை

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில்பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.முன்னாள் முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் 2001 - 2006 ஆம் ஆண்டு தேர்தல்கள... மேலும் பார்க்க