செய்திகள் :

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

post image

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகள் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இக்கோரிக்கைக்கு எந்த நாடும் சாதகமாக பதில் கொடுக்கவில்லை.

இதற்கிடையே இப்போரில் ஈரானின் புதிய மத உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதன்யாகு

இதனால்தான் அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு இத்தாக்குதலில் காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இப்போது படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் ஜனாதிபதி மசூத்திடம் போனில் பேசியபோது தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தால் மொஜ்தபாவிற்கு ஈரானில் சிகிச்சை கொடுக்க சரியாக இருக்காது என்று கருதி, அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஈரான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து அவர் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் ரஷ்ய ராணுவ விமானத்தில் ரஷ்யாவிற்கு அனுப்பி அவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவில் புதின் வீட்டு வளாகத்திற்குள் இருக்கும் மருத்துவமனையில் மொஜ்தபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் அல் ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மத உச்ச தலைவர் மொஜ்தபாவை இஸ்ரேல் குறிவைக்கும் அபாயம் இருக்கிறது. அதோடு அவர் ஈரானில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் யாராவது அவர் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. மற்றொருபுறம் மொஜ்தபா ஈரானில்தான் சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மொஜ்தாபா கமேனி ஈரானுக்குள் சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரேசா ஜாபர்காண்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்திப்படி, புதிய உச்ச தலைவரின் ஒன்று அல்லது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது கல்லீரல் அல்லது வயிற்றிலும் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோமா நிலையில் இருப்பதாகத் அச்செய்தி கூறுகிறது. மற்றொரு செய்தியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கமேனிக்கு அருகில் கட்டடக் கழிவுகள் விழுந்ததால் அவரது உடலின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ''மொஜ்தபா உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை யாரும் உயிருடன் காட்டவில்லை. அவர் உயிரோடு இல்லை என்றுதான் எனக்கு செய்திகள் வருகிறது'' என்றார். இதே போன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர் சமீபத்தில் காபி குடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார்.

அதுவும் உண்மையானதா அல்லது ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் வழக்கமாக கைவிரலில் மோதிரம் அணிந்து இருப்பார். சமீபத்தில் வெளியான வீடியோவில் மோதிரம் இல்லை. அதோடு அவரது மகன் தினமும் எக்ஸ் தளத்தில் குறைந்தது 20 பதிவுகளையாவது வெளியிடுவார். ஆனால் அவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனால் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! - மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட ... மேலும் பார்க்க

`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' - சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்க... மேலும் பார்க்க

'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவ... மேலும் பார்க்க

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்...அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி அரவக்குறிச்சி. டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுத... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட... மேலும் பார்க்க

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் இறங்கப் போவது யார்? பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவை நிறுத்த ஆலோசனை

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில்பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.முன்னாள் முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் 2001 - 2006 ஆம் ஆண்டு தேர்தல்கள... மேலும் பார்க்க