செய்திகள் :

'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

post image

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே 'ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்' எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

அசோக்
அசோக்

முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், 'எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக வாழ வேண்டும் என்பதை என் குரு ரஜினிதான் கற்றுக்கொடுத்தார்.

ரஜினி அரசியலுக்கு வராததுக்கு கொரோனா மட்டுமே காரணம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதன்பிறகும் நான் அரசியலில் சேவை செய்ய நினைத்தேன். அதற்காகத்தான் விஜய்யை தலைவராக ஏற்று வந்தேன். ஆதவ் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி வந்தவர். ரஜினி ரசிகர் மன்றத்தில் நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகையில் மக்களுக்காக ஆதவ்வும் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்.

அசோக்
அசோக்

45 வருடமாக ரஜினியுடன் இருந்தவர். அவரை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். ஆதவ் வேண்டுமென்றே ரஜினியை பற்றி பேசியிருந்தால் அங்கேயே மேடையில் ஏறி கேட்டிருப்பேன். அவர் வார்த்தை தவறிதான் பேசினார். ரஜினி பயந்தவர் கிடையாது. போராட்டக்குணம் மிக்கவர். ஆதவ்விடம் எனக்கு ஒரு கோரிக்கை. ரஜினி சாரை பற்றி எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என நீங்கள் விளக்கிவிடுங்கள். ரஜினி சாரை பற்றி யாரும் தவறாக பேசினால் நான் தட்டிக் கேட்பேன்' என்றார்.

'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! - ஆதவ் விளக்கம்!

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினி... மேலும் பார்க்க

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! - மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட ... மேலும் பார்க்க

`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' - சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்க... மேலும் பார்க்க

'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவ... மேலும் பார்க்க

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்...அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி அரவக்குறிச்சி. டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுத... மேலும் பார்க்க

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்... மேலும் பார்க்க