செய்திகள் :

ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

post image

கஞ்சா விற்பனை முதல் கச்சா ஃபிலிம் தொழிற்சாலையின் வெள்ளி கலந்த மண் திருட்டு வரை நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினரே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஊட்டி நகர மத்திய காவல் நிலைய காவலர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்து கஞ்சா புழக்கத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள்.

Ganja rep image AI
Ganja rep image AI

பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், "நீலகிரியைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தவறிழைக்கும் பல காவலர்களை பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபர் என்ற பெயரில் நீலகிரிக்கு மாற்றுகிறார்கள். பனிஷ்மெண்ட்டில் வரும் காவலர்கள் இங்கு வந்ததும் குற்றச்செயல்களை இன்னும் சௌகரியமாகத் தொடர்கிறார்கள்.

குறிப்பாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கைதும் ஆகியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி நீலகிரியில் விற்பனை செய்து வந்த ஊட்டி போலீஸ் நசீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் கஞ்சா வியாபாரியிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Ganja rep image AI
Ganja rep image AI

மேலும், பணி நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி போலீஸ் மாயக்கண்ணன், மசினகுடி போலீஸ் சாந்தகுமார் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா புழக்கத்தில் நீலகிரியில் பணியாற்றும் டிராஃபிக் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

`திருமணமானவருடனான காதலை கைவிட கெஞ்சினேன்' - சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை கைது

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.பின்னர், அ... மேலும் பார்க்க

திருச்சி: 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்; 58 வயது முதியவர் சிக்கியது எப்படி?

திருச்சி, காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது: 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற... மேலும் பார்க்க

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் ... மேலும் பார்க்க