செய்திகள் :

SIR: ``கண் தெரியாத அம்மாவுடன் பல நாள்களாக அலைகிறேன்" - பாமர நபரின் ஆதங்கம் | வைரலாகும் வீடியோ

post image

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்படுகிறது. அதில் ஒரு மாநிலம் மத்தியப் பிரதேசம். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலிருந்து வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் விழிச்சவால் கொண்ட தன் தாயுடன் ஒருவர் ஆதங்கத்துடன், இயலாமையால் முறையிடுகிறார்.

அந்தக் காணொளி தொடர்பாக வெளியான தகவலில், இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இந்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது நடந்திருக்கிறது. இந்தக் கூட்டம் கூடுதல் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் அது குறித்து புகார் அளிக்க அந்த நபர் தன் தாயுடன் வந்திருக்கிறார்.

ஆட்சியாளரை சந்திக்க உரிய அனுமதி இல்லாததால், ஆட்சியாளரை சந்திக்கமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அதிருப்தியடைந்த அந்த நபர் சப்தமிடுகிறார்.

அவர் கோபத்தில் பேசுவதில், அவர் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பலமுறை புகார் அளித்திருக்கிறார். ஆனால், வாக்குச்சாவடி நிலை அதிகாரியோ, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ உரிய பதிலளிக்காமல் புறக்கணித்திருக்கின்றனர் என்பது புரிகிறது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்த நபர், ``கலெக்டர் ஐயா ஏழை மக்களைச் சந்திப்பதே இல்லை. நாங்கள் வந்து வந்து சோர்வடைந்துவிட்டோம். அவர் வர வேண்டாமா, சந்திக்க வேண்டாமா? நாங்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா? என் அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்கு கண் தெரியாது.

 தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

நான் தினக் கூலி வேலை செய்து குடும்பத்தை பராமரிக்கிறேன். மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்குச் செல்வது மனச்சோர்வாகவும், பொருளாதார ரீதியில் கடினமாகவும் இருக்கிறது. தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்திருந்தபோதிலும், எனது புகாரைக் கேட்க மாவட்ட ஆட்சியர் தயாராக இல்லை." என்றார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

வாக்களர் தீவிரத் திருத்தம் குறித்து ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

சிறுமிகளை விரட்டிவிட்டு கங்கைக்குப் பால் அபிஷேகம்; வைரலான வீடியோவும்... எழுந்த விவாதங்களும்!

இந்துகளின் புனித நதிகளில் ஒன்று கங்கை கங்கையில் நீராடினால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது என்றும் சொல்வதுண்டு. கங்கை ந... மேலும் பார்க்க

துலாபாரத்தில் நாய்: நடிகையின் செயலால் வைரலான வீடியோ; பக்தர்கள் கண்டனம் - நடிகையின் விளக்கம் என்ன?

தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்க... மேலும் பார்க்க

Zomato: பதவி விலகிய சொமோட்டோ நிறுவனர்; டெலிவரி ஊழியர்களின் போராட்டம்தான் காரணமா? - பின்னணி என்ன?

சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'எடர்னல்' (Eternal)-ன் நிறுவனராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர் தீபிந்தர் கோயல். இந்த மாத தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான டெல... மேலும் பார்க்க

பிரபலமாகும் ``Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?

நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonel... மேலும் பார்க்க

``ஆண்கள் அணைவரையும் சிறையில் அடைத்துவிடலாமா?" - விமர்சிக்கப்படும் நடிகை ரம்யாவின் பதிவு!

நாய்கள் மீது அன்பு கொண்டவர்களும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என வாதிடுபவர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீத... மேலும் பார்க்க