செய்திகள் :

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

post image

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.

யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி - ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது.

இதில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி இணைந்தது.

இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை எடுத்து சாதனைப் படைத்திருக்கிறார்.

ஆட்டத்திற்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் நோக்கி நடந்த வந்தபோது, ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் எழுந்து நின்று பாராட்டியிருக்கின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இளம் வயதில் (14) கிரிக்கெட்டில் மிரளவைக்கும் சூர்யவன்ஷிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது 28.1 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" - நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட... மேலும் பார்க்க

T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக்கோப்பை முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதுகுறித்த முழுத் தகவல் இங்கே!ஐசிசி டி20உலகக்கோப்பைகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10வது ஐசிசி டி20 ... மேலும் பார்க்க

Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்... மேலும் பார்க்க

WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!

10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடை... மேலும் பார்க்க

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று... மேலும் பார்க்க

T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" - பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம்

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையா... மேலும் பார்க்க