செய்திகள் :

திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் - முடிவுக்கு வராத காரணம் என்ன?!

post image

``காங்கிரஸ் கட்சி தி.மு.க விவகாரத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க காரணமே தி.மு.க-வின் சில தவறான அணுகுமுறைகள்” என்று கிசுகிசுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள்.

காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்கும் நிலை இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முகாமில் நடக்கும் விவரங்கள் குறித்து விசாரித்தோம்.

த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கப் போகிறது காங்கிரஸ் என்கிற செய்திகளும், அதன் பின்னணியில் த.வெ.க தரப்புடன் காங்கிரஸ் புள்ளிகள் நடத்திய பேச்சும் பொதுவெளியில் பெரும் பேசு பொருளானது. ஆனால், இந்த விவகாரங்கள் வெடிப்பதற்கு முன்பே இப்படி ஒரு சீனை உருவாக்க வேண்டும் என்கிற மூடில் காங்கிரஸ் டெல்லி தலைமை தெளிவாக இருந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாகக்கூட தி.மு.க தரப்பு மதிக்கவில்லை என்பதை பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமைக்குப் புகாராகத் தெரிவித்திருந்தனர், தமிழக காங்கிரஸ் புள்ளிகள். 

திமுக
திமுக - அண்ணா அறிவாலயம்

திமுக-வுக்கு செக்!

“தி.மு.க-வுக்கு செக் வைக்க ஒரு வாய்ப்பாக  அமைந்தது த.வெ.க. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று ராகுல் திட்டமிட்டுதான் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் த.வெ.க தரப்பை தொடர்புகொள்ள வைத்தார்” என்கிறார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். 

ராகுலின் இந்த மூவ்வை அறிந்த தி.மு.க தலைமை, கடந்த டிசம்பர் மாதமே முதல்வரின் மருமகனை வைத்து ராகுலை சந்திக்க வைத்தனர். அப்போதும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்கிற நம்பிக்கையை கொடுத்தார் ராகுல். ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர்கள் தி.மு.க-வை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு நடவடிக்கை இருக்கும் என்று தி.மு.க தலைமை எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸ் தலைமை அதை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கடும் டென்ஷனில் தி.மு.க இருந்தது. காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க வுக்கு எதிராக செயல்படுகிறதோ என்கிற எண்ணம் தி.மு.க கீழ் மட்ட நிர்வாகிகளிடம் இருந்தது. 

சத்தியமூர்த்தி பவன்

ராகுலுக்குச் சந்தேகம்?

ஆனால், காங்கிரஸ் தரப்பில் மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. “தி.மு.கவுக்கு நாங்கள் செக் -வைத்தது உண்மை. அதேநேரம் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் கரைசேர விடாமல் செய்யும் வேலையை பா.ஜ.க தரப்பு செய்துவருகிறது. அதற்கு தி.மு.க-வும் ஒத்துப்போகிறதோ என்கிற சந்தேகம் ராகுலுக்கு உள்ளது. சில தினங்களுக்கு முன் டெல்லியில் ராகுலை சந்தித்த தி.மு.க குடும்பத்தை சேர்ந்த முக்கியப் புள்ளி, சந்திப்பு நடத்தி தொகுதி எண்ணிக்கை குறித்தெல்லாம் பேசினார்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

ஆனால், அவர் சொன்ன தொகுதி எண்ணிக்கையும் அவரது பேச்சும் தி.மு.க-வுடன் காங்கிரஸ் இணைந்து போகாத வகையில் இருந்தது. இது ராகுலுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

தி.மு.க தரப்பு தங்களைக் கழற்றிவிட எண்ணுகிறதோ என்கிற எண்ணம் அப்போது தான் ராகுலுக்கு உருவானது. அதன்பிறகே தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் பேசியிருக்கிறார் ராகுல். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பிலிருந்து  கூட்டணி பேச்சு குறித்த அழுத்தம் தி.மு.க-வுக்கு சென்றது. அதன்பிறகே கனிமொழியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர். தி.மு.க குழுவை அமைத்த பிறகு பேசி முடிவெடுக்கலாம் என்று அப்போது ராகுல் உறுதி கொடுத்தார்.

கண்ணாமூச்சி ஆட்டம்!

இப்போது வரை குழு அறிவிப்பை தி.மு.க வெளியிடவில்லை. அவர்களுக்கு காங்கிரஸ் இல்லாத அணியை அமைக்கும் எண்ணம் உள்ளது. அதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து தி.மு.க புள்ளிகளுக்கு ஏதும் அழுத்தம் வந்திருக்குமோ?” என்று காங்கிரஸ் டெல்லி தலைமை நினைக்கிறது என்கிறார்கள். 

அதே நேரம் தி.மு.க-வினரோ, “காங்கிரஸ்  கட்சியை கழற்றிவிடும் எண்ணம் ஒருபோதும் தி.மு.க-வுக்கு இல்லை. அவர்களை கழற்றிவிட்டால் பா.ஜ.க -வை நாங்கள் சரிகட்டிக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால், தேர்தலில் நாங்கள் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியும் முக்கியம் வேண்டும். அவர்கள்தான் கூட்டணியை விட்டு வெளியே செல்லும் பாதையை ஏற்படுத்துகிறார்கள்” என்கிறார்கள். 

இந்த மறைமுக கண்ணாமூச்சி ஆட்டமே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகாமல் இழுத்தடிக்க காரணமாக உள்ளது. இதையே ஒரு செக் பாயின்ட்டாக வைத்து தங்களின் சீட் கணக்கையும் நேர் செய்து கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த ஆட்டம் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என்கிறார்கள் இரண்டு கட்சிகளையும் நன்கு அறிந்தவர்கள். 

`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறார்' - உதயநிதி

தஞ்சாவூரில் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமணம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் இல்லத் திருமணம் என இரண்டு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க

எம்ஜிஆரின் 'இரட்டை' வியூகம்! - தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Vikatan Signature Campaign: பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் IAS மச்சேந்திரநாதனே அறிக்கை வெளியிடுக!

ஆயிரம் நாள்களைக் கடந்து பரந்தூர் விமான நிலையப் பிரச்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அதிமுக, தவெக, இடதுசாரிகள் தொடங... மேலும் பார்க்க

`பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!' - கொதிக்கும் மாணிக்கம் தாகூர் | Exclusive

விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை, டெல்லியில் சந்தித்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி, நாடாளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து அவருடன் விரிவாக உரையாடினோம்.நாடாளுமன்றத்தில் என்ன விஷயத்... மேலும் பார்க்க

அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained

'இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?' - இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று. ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார... மேலும் பார்க்க

பிரபலங்களுடன் போட்டோ; ஃபோர்ஜெரி பணத்தில் எம்.எல்.ஏ ஆக பிளான் - புதுச்சேரி தொடர் குற்றவாளி கைது!

`நம்மவரின் செல்லக்குட்டி...’புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் சில லட்சங்களை செலவு செய்து இலவசங்கள் கொடுத்தால் போதும், அங்கு ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுவிட முடியும். கடந்த இருப... மேலும் பார்க்க