செய்திகள் :

தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!

post image

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு மண்டலமாக பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவை கணியூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டலத்தின் தவெக முக்கிய முகமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

செங்கோட்டையன் படம்
செங்கோட்டையன் படம்

மேலும் இந்நிகழ்வுக்காக தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன்  படமும் இடம்பெறவில்லை.

இந்தக் கூட்டத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம், ``தவெக சார்பில் தேர்தலுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் தவெக பிரசார குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார்.

செங்கோட்டையன்,
செங்கோட்டையன்

இது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குழு. இப்படி தேவையில்லாமல் பிரச்னை செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் அப்படி எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

மற்றொரு நிர்வாகியான ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம், “தவெகவின் அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்த தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அருண்ராஜ்

மேலும் பொதுக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வந்து தவெக  பொதுக் கூட்டங்கள் மற்றும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாகவும் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.

`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது ... மேலும் பார்க்க

இந்தவாரம் Vikatan.com ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? அப்போ பதில் சொல்லுங்க... பரிசை அள்ளுங்க!

விகடன் இணையதளத்தில் வெளியான தொடர்களை ஏற்கனவே படிச்சிட்டீங்கனா, கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து க்விஸ் போட்டியில் உடனே பங்குபெறுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசு இருக்கு... https://... மேலும் பார்க்க

StartUp சாகசம் 56: `இணையவழி இணைப்பு + AI' - Smart Toilet துறையில் சாதிக்கும் காளியப்பன் | Sprint 6

Sprint6StartUp சாகசம் 56எதிர்கால இந்தியாவில் மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தாலும் உள்ளேயே உள்ள அச்சுறுத்தல் கழிவு மேலாண்மைகள், அந்த கழிவு மேலாண்மையில் கழிவறைகளில் மேலாண்மை என்பது மிக முக்... மேலும் பார்க்க

நள்ளிரவு கைது: `என் உயிருக்கு ஆபத்து' - 30 வருட பழைய வழக்கில் பீகார் எம்.பி மீது அதிரடி நடவடிக்கை

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு எடுத்து அதில் எம்.பி அலுவலகம் அமைத்ததால், வீட்டு உரிமையாளர் மோசடி வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க

சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கிய கருணாநிதியும், எம்ஜிஆரும் அதே காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைத்தார்கள். ஒரு இடைத்தேர்தலில் நடந்த ஆடுபுலி ஆட்டம் அதிமுக காங்கிரஸ் கூட்டணியை இறுகப்பற... மேலும் பார்க்க