செய்திகள் :

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

post image

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற்பட்டால் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரியாக பழுதுபார்த்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவ்புரி என்ற இடத்தில் வசிக்கும் குடியா என்ற பெண் ஆறு மாதத்திற்கு முன்பு இ-ஆட்டோரிக்‌ஷா ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் வாங்கிய இரண்டு மாதத்தில் இருந்து சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து குடியா கூறுகையில், ''நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வந்தோம்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு கடன் வாங்கி ரூ.2.50 லட்சத்தில் இ-ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றை விலைக்கு வாங்கினோம். ஆனால் இரண்டு மாதம் கூட சரியாக ஓடவில்லை. கடந்த 4 மாதங்களாக நாங்கள் இ-ரிக்‌ஷாவுடன் அதனை வாங்கிய ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். பழுதுபார்த்து கொடுக்கும்படி கெஞ்சுகிறோம். ஆனால் அவர்கள் எங்களை விரட்டியடிக்கின்றனர். இதனால் ஆட்டோ எங்களது வீட்டில் வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. நாங்கள் மீண்டும் கூலி வேலைக்கு செல்கிறோம்.

ஆட்டோவிற்கு வாங்கிய கடனுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கட்டிக்கொண்டிருக்கிறோம்''என்றார். வழக்கம்போல் ஆட்டோ ரிக்‌ஷாவுடன் அதனை வாங்கிய கடைக்கு குடியா சென்றபோது அதனை பழுதுபார்க்க முடியாது என்று அங்கு இருந்தவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பெண் கோபத்தில் அந்த கடைக்கு வெளியில் தனது ஆட்டோவை நிறுத்தி அதற்கு தீவைத்துவிட்டார். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் வந்து தீயை அணைந்து ஆட்டோவையும், அப்பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஏஜென்சி நிர்வாகம் ஆட்டோவை முழுமையாக பழுதுபார்த்து கொடுக்கவேண்டும். இல்லாவிடில் தான் கட்டிய முழு பணத்தையும் திரும்ப கொடுக்கவேண்டும் என்று குடியா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆட்டோ ரிக்‌ஷாவை விற்பனை செய்த ஏஜென்சி பொறுப்பாளர் சுபம் கூறுகையில்,''வண்டியில் எந்த பிரச்னையும் இல்லை. பேட்டரி வெடித்துவிட்டது. பேட்டரிக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது. பேட்டரியை வாடிக்கையாளர்தான் சொந்த பணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். குடியாவிடம் பேட்டரியை மாற்றும்படி கூறினோம். ஆனால் அவர் மறுத்து வருகிறார்'' என்றார்.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதா... மேலும் பார்க்க