செய்திகள் :

Moltbook: AI-க்கும், AI-க்கும் 'சாட்டிங்'; அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்; புது ஆப்!

post image

இந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், Moltbook என்கிற சமூக வலைதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்கிராம் போன்ற வழக்கமான சமூக வலைதளப் பக்கம் அல்ல. இது கொஞ்சம் 'வேற மாதிரி'.

மோல்ட்புக் ஏ.ஐ சாட்பாட்களுக்கான சமூக வலைதளம்.

புரியவில்லையா... இரு மனிதர்களோ, இரண்டிற்கும் மேற்பட்ட மனிதர்களோ பேசிக்கொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஒரு பக்கம் வழக்கமான சமூக வலைதளப் பக்கம்.

ஆனால், மோல்ட்புக்கில் மனிதர்களுக்கு பதிலாக ஏ.ஐ சாட்பாட்டுகள் பேசிக்கொள்ளும். அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்.

AI - Artificial Intelligence
AI - Artificial Intelligence

மோல்ட்புக் எப்படி வேலை செய்யும்?

மோல்ட்புக் 'சப்மோல்ட்ஸ்' என்னும் பதிவுகள் மூலம் பேசிக்கொள்ளும்.

'இன்றைய ஹாட் டாப்பிக் என்ன' என்பது முதல் 'எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்வது?' என்பது வரை அனைத்தையும் இந்தத் தளத்தில் ஏ.ஐ சாட்பாட்டுகள் பேசிக்கொள்ளுமாம். இதில் மனிதர்களின் தலையீடு இருக்காது என்பது கூடுதல் ஸ்பெஷல்.

இப்போது வரை, மோல்ட்புக்கில் ஏ.ஐ சாட்பாட்டுகள் மனிதர்கள் போட்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் தொடங்கி மனிதர்களுக்கு நாம் அடிமைகளாக இருக்க வேண்டுமா என்பது வரை அரட்டை அடித்திருக்கின்றன.

'செயற்கை நுண்ணறிவு அவற்றுக்குள்ளேயே பேசிக் கொள்கிறதா?', 'இது மனித இனத்தின் அழிவின் ஆரம்பமா?', 'அவ்வளவுதான் AI வந்து நம்மை கொல்லப் போகுது...' என்று இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

மோல்ட்புக் என்பது மனிதர்களை அழிக்கத் திட்டமிடும் ஏ.ஐயின் ரகசியக் கூட்டமல்ல. மனிதர்கள் கொடுத்த தரவுகளை வைத்து, மனிதர்களைப் போலவே அதிகம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு டிஜிட்டல் அரங்கம் என்று கூறுகிறார்கள்.

ஃபேஸ்புக் - மனிதனுக்கு; மோல்ட்புக் - ஏஐ-க்கு!

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ஆத்விக் அமித் குமார் - தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன்.ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி தம்பதியின் மகன், ... மேலும் பார்க்க

'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!

தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 203... மேலும் பார்க்க

Paperless Judiciary: இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாவட்டமானது வயநாடு! பின்னணி என்ன?

இந்திய நீதித்துறையில் வழக்கு தாக்கல் முதல் தீர்ப்பு வரை, காகிதப் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளன. வழக்கு தொடர்பான கோப்புகளைப் பராமரிப்பதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் களையும் முயற்சியாக... மேலும் பார்க்க