செய்திகள் :

'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!

post image

தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது.

சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி

சீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.

Chinese Students
Chinese

“எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, "வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Paperless Judiciary: இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாவட்டமானது வயநாடு! பின்னணி என்ன?

இந்திய நீதித்துறையில் வழக்கு தாக்கல் முதல் தீர்ப்பு வரை, காகிதப் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளன. வழக்கு தொடர்பான கோப்புகளைப் பராமரிப்பதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் களையும் முயற்சியாக... மேலும் பார்க்க

சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் பொருத்தப்பட்ட டிவைஸ்; வைரலான புகைப்படம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்

உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது.தீபிந்தர் கோயல்சி... மேலும் பார்க்க

இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் 'BlueBird Block-2' எதற்காக இந்த செயற்கைக்கோள்?

தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது. அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM... மேலும் பார்க்க

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம்.ஆனால... மேலும் பார்க்க