செய்திகள் :

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

post image

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் சிக்செங்க் மான்புங் என்பவர் திபாங்க் பள்ளத்தாக்கில் அனினி என்ற இடத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் அவரது வாகனத்தை வழிமறித்த புலி ஒன்று தலைமைக் காவலரைத் தாக்கியது. இதில் புலி அவரைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது. அவரைக் கடித்துத் தின்றுவிட்டு புலி காட்டுக்குள் சென்றுவிட்டது.

இது குறித்து கேள்விப்பட்டதும் வனத்துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து காவலரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலி
புலி

சம்பவம் நடந்த மயூடியா பகுதியில் ஏற்கனவே பல முறை பொதுமக்கள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி மிதோ ருமி கூறுகையில், ''இப்பகுதியில் ஒரு புலியும், அதன் மூன்று குட்டிகளும் தென்படுவதை இரவு நேரங்களில் பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

அப்புலிகளைப் பத்திரமாகப் பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய்விட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புலிகள் சரணாலயத்தில் இருந்து ஊழியர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதா... மேலும் பார்க்க