செய்திகள் :

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

post image

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதி நாகரத்தா, உஜ்ஜால் புவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பெண் வழக்கறிஞரை ஆண் வழக்கறிஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இருந்தார்.

திருமணம்
திருமணம்

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சம்மதத்துடன் நடக்கும் உறவில் விரிசல் ஏற்படும்போது, குற்றவியல் நீதித்துறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கவலை தெரிவித்தனர், திருமண வாக்குறுதியின் பேரில் மற்றொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும் திருமணமான பெண், தான் உறவு வைத்துக்கொள்ளும் ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒரு பெண் ஏற்கனவே திருமண வாழ்வில் இருப்பதால் அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ள தகுதியற்றவர் என்று கூறி திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் வழக்கறிஞர் கொடுத்திருந்த புகாரை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இவ்வழக்கில் மனுதாரர் மற்றொருவருடன் உறவில் இருந்தபோது ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்தார். மேலும் அவர்களிடையே இருந்த ஒருமித்த உறவில் விரிசல் ஏற்பட்டதால் உருவான வழக்கு இது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் செயல்களில் ஈடுபடும் போது திருமணம் செய்வதாகக் கூறியது உண்மையாகவே இருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அத்தகைய வாக்குறுதியைச் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்த முடியாது.

ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவர். சட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைத் தடைசெய்கிறது. முதல் திருமணம் செயல்பாட்டில் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை சட்டம் தடுக்கிறது'' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க