செய்திகள் :

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

post image

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.

அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

அப்படி என்ன பேசினார்?

2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.

இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனை
அணு ஆயுத சோதனை

இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா 'Decoupling' முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.

இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

சீனாவின் மறுப்பு

"அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.

இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி" என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.

”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” - முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியில், தி.மு.க இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்.பிக்கள், அமைச்சர்கள்,... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.அந்த எதிர்ப்புக... மேலும் பார்க்க

இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் (பிப்ரவரி 2), இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் முடிவாகி உள்ளதை அறிவித்தனர்.இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களும் நேற்று வெளியா... மேலும் பார்க்க

பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? - என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?

வி.கே சசிகலாவைச் சந்தித்ததையடுத்து தன் கட்சியில் பொறுப்பு வகித்த ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் சசிகலாவின் அக்கா மகனும் அ.ம.மு.க தலைவருமான டி.டி.வி தினகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு... மேலும் பார்க்க