தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள...
முசுமுசுக்கை அடை டு பலாக்கொட்டை லட்டு; புதுச்சேரியை மணக்க வைத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்
'உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!' என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போட்டியில் வில்லியனூர், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், பாகூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அதேபோல விழுப்புரத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவர்களும், கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் சுற்றில், போட்டியாளர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவை காட்சிப்படுத்துவார்கள். போட்டியின் நடுவர் பிரபல யூடியூபர் மற்றும் சமையல்கலை வல்லுநரான செஃப் தீனா, அவர்களில் சிறப்பாக பங்காற்றியவர்களை தேர்வு செய்வார்.
அவர்கள் அங்கேயே நடைபெறும் 'லைவ் கிச்சன் சமையல்' பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். அதில் தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அவள் விகடனுடன் கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், சௌபாக்யா, RKG நெய், மெரிபா பனீர், லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் விதவிதமான உணவுகளை சமைத்து வந்து அசத்தினர்.
உளுந்து கஞ்சி, சீராளம் அலங்காரி, ராகி உப்பு உருண்டை, சைவ ஈரல் மசாலா, முசுமுசுக்கை இலை அடை, முடக்கத்தான் கீரை சூப், கேழ்வரகு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட், கருப்பு கவுனி அரிசி பணியாரம், குதிரைவாலி தினை அரிசி ஃபிரைடு ரைஸ், கொய்யா டெசர்ட், சம்பா கோதுமை மொமோஸ், சென்னாகுன்னி கத்தரிக்காய் தொக்கு, முருங்கை கீரை கூட்டாஞ்சோறு, சுரைக்காய் முருங்கைக்கீரை அடை, கதம்ப சட்னி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி, வெஜ் ஆம்லெட், குக்கும்பர் இட்லி, கேழ்வரகு லாமிங்டன் கேக், மிக்ஸ்டு பருப்பு புட்டு, நெய்வேத்தியம், மிச்சம் அமிர்தம், பலாக்கொட்டை லட்டு, வரகு அரிசி சோயா பிரியாணி, கருப்பு கவுனி அல்வா, தினை இடியாப்பம், கடலைக்கறி, ராகி களி என சைவம், உளுந்து கஞ்சி, ராகி உருண்டை, சோயா கைமா, சோயா உருண்டை, கேரட் அல்வா, இறால் பிராக்கோலி வறுவல், இறால் குழம்பு, அசைவம் உணவுகளை செய்து அசத்தியிருந்தனர்.

அதேபோல இனிப்பு அவல், பூரணம் கொழுக்கட்டை, வரகு சாம்பார் சாதம், சுரைக்காய் சட்னி, கிரேப் பாசி ப்ரான், லெமன் பை, சைய்யோ, மீன் வடை, கிரேப் ஆம்லெட், சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ், பனங்கிழங்கு பாயாசம்,ஆளி விதை களி,இஞ்சி சாறு,கலத்தப்பம்,கவுனி அரிசி கேசரி, பிரண்டை சட்னி,கருப்பு கவுனி அடை தோசை, வெஜ் லாலிபப், சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம், புரோட்டின் லட்டு,பாசிப்பயறு தோசை, சுரைக்காய் சட்னி, சத்துமாவு கொழுக்கட்டை, புதினா காரமுறுக்கு, முருங்கை கீரை பொரிவிளங்காய் உருண்டை, கல்யாணமுருங்கை கீரை அடை, சாலியா விதை லட்டு, சர்க்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை, ரவை தேங்காய்ப்பால் குழி பணியாரம் என பாரம்பர்ய உணவுகளையும் மணக்க மணக்க செய்திருந்தனர்.
அவற்றை சாப்பிட்டுப் பார்த்த செஃப் தீனா, அதன் ரெசிப்பிக்களை கேட்டு தெரிந்து கொண்டார். பிப்ரவரி 14-ம் தேதி வேலூரில் 109, புதிய புறவழிச்சாலை, ஜி.ஆர்.டி ரீஜன்சி அருகில், தோட்டப்பாளையத்தில் இருக்கும் சாந்தி மஹாலிலும், மறுநாள் 15-ம் தேதி சேலத்தில் கொண்டலாம்பட்டியில் இருக்கும் சௌடேஸ்வரி மகளிர் கல்லூரியிலும் நடைபெற இருக்கிறது.

















