செய்திகள் :

தேனி: TVK – NTK கட்சியினர் மோதல்; கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு!

post image

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

சாட்டை துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த விஜய் கட்சியினர் விசிலடித்து கொண்டி ’ TVK' 'TVK' என கூச்சலிட்டவாறே சென்று கொண்டிருந்தனர்

இதற்கு முன்னதாக  தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி என்பவர் ’தவெகவை அதிகம் விமர்சனம் செய்கிறாய் தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு’ என சாட்டை துரை முருகனுக்கு கொலை மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதைக் குறிப்பிட்டு நேற்று மேடையில் பேசிய துரைமுருகன், ``நான் தேனியில் தான் இருக்கிறேன் உன்னால் முடிந்ததை செய்" என ஆக்ரோஷமாக பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

சாட்டை துரைமுருகன்

இந்த நிலையில் ஐந்து கார்களில் வந்து கூச்சலிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரின் கார்களை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் த.வெ.க கட்சியின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்ந்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த நபர் குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

TNPSC குரூப் 2, 2A தேர்வு ஒத்திவைப்பு; "ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர்‌ அறிவ... மேலும் பார்க்க

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி ச... மேலும் பார்க்க

’முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள்போல முரட்டு அடிமை பழனிசாமி’ - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

விருதுநகரில் திமுகவின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி... மேலும் பார்க்க

”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” - முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியில், தி.மு.க இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்.பிக்கள், அமைச்சர்கள்,... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.அந்த எதிர்ப்புக... மேலும் பார்க்க