செய்திகள் :

நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தம்; வலசை பறவைகள் உயிரிழக்கும் அபாயம்!

post image

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து 80 அடி கால்வாய் வழியாக நாங்குநேரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வழக்கமாக அணையில் போதிய நீர் இருப்பின், மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், தற்போது மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இருப்பினும், மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதியில் 10 அடி கன அடி தண்ணீரே திறக்கப்படுகிறது.

உயிரிழந்த வலசை பறவை

ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும் காலகட்டத்தில், ஆண்டுதோறும் வலசை பறவைகள் நெல்லை சரணாலயம் பகுதிக்கு வந்து, ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் முடிந்து, குஞ்சுகளுடன் திரும்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால், கூந்தன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக, கூந்தன்குளம், வடக்கு கழுவூர், காடாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், பல வலசை பறவைகள் சோர்வடைந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.

இது குறித்து பேசிய விவசாயிகள், “மணிமுத்தாறு கால்வாயின் முதல் மற்றும் இரண்டாம் ரீச் பகுதிகளுக்கு இந்தாண்டு போதுமான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் ரீச் பகுதிகளான மூலக்கரைப்பட்டி, அரசனார்குளம், தாந்தோணி, கூந்தன்குளம், வடக்கு கழுவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

வலசை பறவைகள்

ஒரு வாரத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் ரீச் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தி, மூன்றாம், நான்காம் ரீச் பகுதிகளில் உள்ள முக்கிய குளங்களுக்கு தண்ணீர் வழங்கினால், விவசாயமும் காப்பாற்றப்படும், பறவைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்” என்றார். இது குறித்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இது குறித்து விசாரித்து வருகிறோம். அத்துடன் அப்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

'தண்ணீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்'- உணவுப் பாதுகாப்பு ஆணையம் தகவல்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

சமீபகாலமாக மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பெண் யானைமருத்த... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க