செய்திகள் :

TNPSC: `இந்த தேதியில் நடக்கும்' - ரத்தான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

post image

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

TNPSC
TNPSC

இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வு ரத்து குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

``ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வரும் 28ஆம் தேதிக்குள் தேர்வர்களுக்கு பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

`கூட்டணி ஆட்சியா தமிழகத்தில்?' - 'ஷாக்' கொடுத்த சந்தோஷ் - பாஜக கூட்டத்தில் நடந்தது என்ன?

``அ.தி.மு.க தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் ஆட்சியே நடக்கும்.” என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.எல்.சந்தோஷ்.தமிழ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கிறார் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு... மேலும் பார்க்க

'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா

TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.ஆத... மேலும் பார்க்க

பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!

தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல... மேலும் பார்க்க

$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2... மேலும் பார்க்க

``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 20... மேலும் பார்க்க