செய்திகள் :

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

post image

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் திருமணம் நடந்தது. கௌசல்யாவும் ராஜேசும் உறவினர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தார். கடந்த 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொத்தனார் வேலைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, சமையலறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

திருமண கோலத்தில் கௌசல்யா, ராஜேஷ்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் கௌசல்யாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கௌசல்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கௌசல்யா மரணம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸார், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கௌசல்யாவின் சடலத்தைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் பொன்னேரி போலீஸார், ராஜேஷிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். இந்தச் சமயத்தில்தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் கௌசல்யா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள், போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையிலான போலீஸார், ராஜேஷிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய மனைவி கௌசல்யா, சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி இறந்துவிட்டதாகவே கூறினார். அதை நம்பாத போலீஸார், கால் வழுக்கி கீழே விழுந்திருந்தால் எப்படி முகத்தில் நகக்கீறல் ஏற்படும் என அடுத்த கேள்வியை ராஜேஷிடம் கேட்டனர். அதோடு அந்த நகக்கீறலுக்கு காரணம் நீதான் என்று ஆதாரத்துடன் கூற ராஜேஷ், தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தீபிகா

இதுகுறித்து பொன்னேரி போலீஸார் கூறுகையில்,

``கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ், செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த தீபிகா என்கிற லோகேஸ்வரியுடன் (21) நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். ராஜேசும் தீபிகாவும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இவர்களின் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுடன் ராஜேஷுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதனால் தீபிகாவுடன் பேச முடியாமல் ராஜேஷ் சிரமப்பட்டிருக்கிறார். எனவே கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டமிட்டிருக்கிறார். அதை தீபிகாவிடமும் கூறி ஆலோசித்திருக்கிறார். இதையடுத்துதான் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதைப் போல சென்ற ராஜேஷ், யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மனைவி கௌசல்யா சோபாவில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த ராஜேஷ், மனைவி கௌசல்யாவின் மூக்கை பொத்தி கழுத்தை நெரித்திருக்கிறார். அப்போது கௌசல்யா, போராடியதில் அவரின் முகத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயைடுத்து கௌசல்யாவின் தலையை டைல்ஸ் தரையில் மோதி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜேஷ். அதைத் தொடர்ந்து சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி கௌசல்யா உயிரிழந்ததைப் போல செட்டப் செய்த ராஜேஷ், கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக வெளியில் சென்றுவிட்டார். ஆனால் நகக்கீறலால் ராஜேஷ் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இந்தக் கொலைக்கு தீபிகாவும் உடந்தை என தெரியவந்ததால் அவரையும் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த... மேலும் பார்க்க

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க

கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!

மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில்... மேலும் பார்க்க

மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?

மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்... மேலும் பார்க்க

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வ... மேலும் பார்க்க