செய்திகள் :

நிலவில் இடம் பிடித்தது இஸ்ரோ! - சந்திரயான் 4 தடம் பதிக்கப்போகும் 'அந்த' ரகசிய இடம் எது?

post image

சந்திரயான் 3 லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி, நிலவின் தென்பகுதியை துல்லியமாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியதை தொடர்ந்து, நிலவில் உள்ள மண் போன்றவற்றை எடுத்து வருவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக இஸ்ரோ சந்திரயான் 4-ஐ நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சந்திரயான் 4 நிலவுக்கு அனுப்பப்பட்டு, நிலவின் மாதிரிகளை சேகரித்து அதை பூமிக்கு அனுப்பும் இந்தத் திட்டம் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2028-ல்தான் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் முன்பு கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த சவாலான செயல்பாட்டின் முதல் கட்டமாக நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டரை தரையிறக்குவதற்காக நான்கு இடங்களைத் தேர்வு செய்திருந்தனர்.

சந்திராயன் 4 | Gemini AI

அதில் ஓர் இடத்தை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை மாலபெர்ட் மௌண்டன் (MM) என்று குறிப்பிடுவார்கள்.

இதில் MM 1, MM 3, MM 4 மற்றும் MM 5 என நான்கு இடங்களைக் கண்டறிந்துள்ளோம். MM 4-ஐ சந்திரயான் 4-ன் லேண்டர் தரையிறங்குவதற்கான இடமாக அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த MM 4-ஐ சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சதுர பரப்பளவில் ஆபத்து சதவிகிதம் குறைவாக இருப்பதும், அதிக அளவில் ஆபத்து இல்லாத பகுதி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே MM 4 சந்திரயான் 4 திட்டத்திற்கான சாத்தியமான இடமாக கருதப்படலாம் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Planetary Parade: சூரிய குடும்பத்தின் மகா சங்கமம்: வானில் அணிவகுக்கும் 6 கோள்களின் அபூர்வக் காட்சி!

வானில் ஒரு மாயாஜாலக் காட்சிபிரபஞ்சத்தின் முடிவில்லா ரகசியங்களில் ஒன்றாக, வரும் 2026 பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று வானில் ஒரு மாயாஜாலக் காட்சி அரங்கேறப் போகிறது.விண்வெளி என்பது வெறும் இருள் சூழ்ந்த வெற... மேலும் பார்க்க

`ஆகாயத்தின் உயரத்துக்கு கனவு காண கற்பித்த மங்கை' - கேரளாவை சுற்றிவரும் சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளி வரலாற்றில் முத்திரையைப் பதித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் தனது ... மேலும் பார்க்க

Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரியுமா?

பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ஆம் ஆண்டு இயக்கிய 'Encounters at the End of the World' ஆவணப்படத்தின் காட்சிதான் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகியிருக்கிறது.பென்குயின்கள் பற்றிய அந்த ஆவணப்படத... மேலும் பார்க்க