செய்திகள் :

Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்

post image

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

ஆனால் சுப்மன் கில்லை போல ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மிகக்குறைவு.

என்னிடம் கால்பந்து குறித்து பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதில் இருந்தே அவருடைய ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர் எதை எடுத்துக்கொள்வார் அல்லது அந்த விஷயங்கள் அவருக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

ஆனால், இவ்வளவு இளம் வயதில் தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை கேட்டு, புதிய விஷயங்களை அறிய முயல்வது மிகவும் சிறப்பான ஒன்று.

கிரிக்கெட் உலகில் இளம் வயதிலேயே பல சாதனைகள் செய்திருந்தாலும் அவருடைய எளிமை மற்றும் பண்புத்தன்மையை கண்டு நான் வியந்தேன்.

சுப்மன் கில் - ரியோ பெர்டினாண்ட்
சுப்மன் கில் - ரியோ பெர்டினாண்ட்

இந்த சந்திப்பு இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. மிக விரைவில் நான் இந்தியா வருகிறேன்" என்று சுப்மன் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்... மேலும் பார்க்க

T20: 'இது' தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின்‌ சூர்யகுமார்‌ யாதவ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணி... மேலும் பார்க்க

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் ... மேலும் பார்க்க

WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூல... மேலும் பார்க்க

PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத... மேலும் பார்க்க

தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். இந்த நிலையில், இன்று திடீரென அவரின... மேலும் பார்க்க