செய்திகள் :

பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் டாக்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் 'அமைப்புப் பொதுச்செயலாளர்' என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்த கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பணிக்கே திரும்பியிருக்கிறார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவ விநாயகம் தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக 'நிழல் யுத்தம்' நடந்து வந்ததாக பேசப்பட்டது. குறிப்பாக, அண்ணாமலை தரப்பினர் கேசவ விநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் பணி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்கும் வகையில், கோவையில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அண்ணாமலை - கேசவ விநாயகம்
அண்ணாமலை - கேசவ விநாயகம்

அப்போது, ``எனக்கும் அவருக்கும் என்ன இந்தியா - அமெரிக்கா பிஸ்னஸா நடக்கிறது. கருத்து வேறுபாடு வருவதற்கு... கேசவ விநாயகத்தைப் பொறுத்த வரை, பா.ஜ.க-வில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய நமது அமைப்பு பொதுச்செயலாளர். நிறைய தேர்தல்களை சந்தித்திருக்கிறார். நல்ல மனிதர், கடுமையாக உழைக்கக்கூடியவர், எளிமையாக வாழக்கூடியவர். அவர் இப்போது ஆர்.எஸ்.எஸ் பிரசாரத்தில் இருக்கிறார். அவருக்கு எல்லாப் பொறுப்பும் ஒரே பொறுப்புதான்.

முன்பு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து பா.ஜ.க-வுக்கு கொடுக்கப்பட்டிருந்தார். இப்போது ஆர்.எஸ்.எஸ் மீண்டும் அழைத்துக்கொண்டு, வேறு பொறுப்பை வழங்கியிருக்கிறது. கேரளாவில், கர்நாடகாவில், புதுச்சேரியில் அமைப்பு பொதுச்செயலாளர் இல்லை. அதுபோல இப்போது தமிழ்நாட்டிலும் இல்லை. இது ஒன்றும் புதிதல்ல. இந்த ஆண்டும் சங்கத்துக்கு திறமையானவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் நடக்கிறது. அதனால், நிறைய வேலைகள் இருக்கிறது. இன்று காலையிலும் கேசவ விநாயகத்தைக் கமலாலயத்தில் சந்தித்துவிட்டு வந்தோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக, அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்திருக்கின்றோம். கேசவ விநாயகத்தைப் பொறுத்த வரை, அவர் பிரசாரகர். அவர் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார், அவ்வளவுதான். அவர் அரசியல்வாதி கிடையாது. அதனால், அவரைப் பற்றி தேவையில்லாத ஒரு விவாதமோ, தேவையில்லாத வீண் சர்ச்சைகளோ முடிவுக்கு வரும் எனக் கருதுகிறேன்.

மதுரை எய்ம்ஸ் திட்டத் தாமதத்துக்குதி.மு.க அரசின் ஒத்துழைப்பு இன்மைதான் காரணம். நிலம் கையகப்படுத்துதல், மரம் வெட்டுதல் உள்ளிட்ட கோப்புகளுக்கு மாதக்கணக்கில் அனுமதி கொடுக்காமல் தாமதித்து, மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

ஆனால், மத்திய அரசின் முயற்சியால் திட்டம் முன்னேறி வருகிறது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். முதலமைச்சர் ஸ்டாலின் எய்ம்ஸ் பகுதிக்கு ஒருமுறை கூட சென்று பார்வையிடவில்லை. அக்கறை இல்லாதவராக இருக்கிறார். திமுகவை வீழ்த்துவதற்கு பல கட்சிகள் விரைவில் என்.டி.ஏ கூட்டணியில் இணையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது." என்றார்.

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!' - டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பி... மேலும் பார்க்க

நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்?" - ராகுல் காந்தி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன... மேலும் பார்க்க

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ... மேலும் பார்க்க

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க

திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன?

காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம்தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிர... மேலும் பார்க்க

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (SPSEs) குறித்து ஆய்வு செய்து, அதன் முதன்மை அறிக்கையில் 2022-23 நிதியாண்டுக்கான விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தி... மேலும் பார்க்க