செய்திகள் :

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

post image

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இருவரின் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஸ்கைபேக்ஸ் சிஎஸ்கே

இது விளையாட்டுத் துறையில் ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் இந்திய கலாசாரத்தோடு நெருக்கமாக இணைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று ஸ்கைபேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே நிர்வாகத்தின் தரப்பில், இந்த ஒப்பந்தம் ரசிகர்கள் மற்றும் அணிக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த பிராண்ட் கூட்டணி ரசிகர்களிடம் கூடுதல் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபிஎல் ஒரு விளையாட்டு தொடராக மட்டுமல்ல, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. அந்த திருவிழா சூழலில், சிஎஸ்கே அணியுடன் ஸ்கைபேக்ஸ் இணைந்திருப்பது அதன் பிராண்டுக்கும் விற்பனைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க

Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில... மேலும் பார்க்க

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்... மேலும் பார்க்க

T20: 'இது' தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின்‌ சூர்யகுமார்‌ யாதவ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணி... மேலும் பார்க்க

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் ... மேலும் பார்க்க

WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூல... மேலும் பார்க்க