செய்திகள் :

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

post image

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். குறிப்பாக கூடலூர் பகுதிகளில் அவர்களால் உருவாக்கப்பட்ட தனியார் பெருந்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் இன்றளவும் அடிமை முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சட்டவிரோத தங்க சுரங்கங்கள்

தோட்டப்பயிர்கள் மட்டுமின்றி மற்ற வளங்களையும் தேடி அலைந்த பிரிட்டிஷார், கூடலூர் பகுதியில் சில இடங்களில் மண்ணுக்குள் தங்க படிமங்கள் இருப்பதை 1831- ம்‌ ஆண்டு கண்டறிந்தனர். மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்து இங்கிலாந்திற்கு கொண்டுச் செல்லும் விதமாக 'ஆல்ஃபா மைனிங் கோல்டு கம்பெனி' என்ற நிறுவனம் மூலம் தேவாலா மலைப்பகுதியில் தங்க சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1890 களில் எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்கவில்லை.

அதேவேளையில், கிடைக்கும் தங்கத்தை விட சுரங்கங்களில் இருந்து எடுத்து பிரிப்பதற்கு அதிகளவில் பொருட் செலவானது. இதனால் தங்க சுரங்கங்களை மூட உத்தரவிட்டனர். ஆனால், அப்போதிருந்தே சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் வேலையில் பலரும் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அத்துமீறி பல தங்க சுரங்கங்கள் இயங்கி வந்தன. நடவடிக்கை என்ற பெயரில் அவ்வப்போது கண்துடைப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

சட்டவிரோத தங்க சுரங்கங்கள்

இதனை சாதகமாக்கிக் கொண்ட கேரள மாஃபியா கும்பலைச் சேர்ந்த சிலர், தேவாலா மலைப்பகுதியில் ரகசியமாக ஊடுருவி உள்ளுர் மக்களை கூலிக்கு பயன்படுத்தி தங்கத்தை கடத்திச் செல்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நூற்றுக்கணக்கான தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதி செய்துள்ளனர்.

இதன் பின்னணி குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையினர், "தேவாலா மலைப்பகுதியில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வருவதை சமீபத்திய கள ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிந்தது. பெரிய அளவிலான சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் மூலம் மலப்புறம் பகுதிக்கு இந்த தங்கங்களை ரகசியமாக கடத்திச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல ஆண்டுகளாக சட்டவிரோத தங்க சுரங்கங்கள் சிறிய அளவில் இயங்கி வந்துள்ளன. ஆனால், தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் காரணத்தால் தங்க மாஃபியா கும்பல்கள் பலவும் கூடலூர் தங்க சுரங்கங்கள் மீது தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டவிரோத தங்க சுரங்கங்கள்

போதைப்பொருள்களுக்கு உள்ளுர் மக்களை அடிமையாக்கி ஆபத்தான தங்கம் எடுக்கும் வேலையில் இரவு நேரங்களில் ஈடுபடுத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தங்க சுரங்கங்களை மூடுவது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை ல... மேலும் பார்க்க

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.இ... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க