செய்திகள் :

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

post image

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இதில் தீவிர விசாரணைக்குப் பிறகு காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்பவரைக் கைது செய்தனர்.

சன்னியைக் கைது செய்து விசாரித்தபோது போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். சன்னி முதுகலைப் பட்டம் முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த வேலையை உதறிவிட்டு இது போன்ற இரவுத் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது
கைது

திருடிய பணத்தில் பி.எம்.டபிள்யூ. கார், வெளிநாட்டுப் பயணம் எனச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பல முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். சன்னியிடமிருந்து 700 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சங்க பிரதா பக்ஷி கூறுகையில், ''கைது செய்யப்பட்டுள்ள சன்னி 15 வயதாக இருக்கும்போதே பூட்டை உடைத்து திருடியதாகக் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்பப்பட்டான்.

அங்கிருந்து விடுதலையான பிறகும், காக்கிநாடா, சரபவரம், ராமச்சந்திரபுரம், இந்திரபாலம் மற்றும் ராஜமுந்திரி ஆகிய இடங்களில் தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

இதற்காக ராஜமுந்திரி மத்திய சிறையில் 14 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தான். மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் அவன் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்'' என்றார்.

வீடுகளுக்குள் நுழைய சன்னி முகமூடிகள், தொப்பிகள், கையுறைகள், சுத்தியல்கள், ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் துளையிடும் இயந்திரங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனா... மேலும் பார்க்க

வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொ... மேலும் பார்க்க

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த... மேலும் பார்க்க

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த... மேலும் பார்க்க

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க

கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!

மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில்... மேலும் பார்க்க