செய்திகள் :

Prakash Raj: சந்தீப் வாங்காவின் ‘Spirit’ படத்தில் இருந்து விலகுகிறேனா? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்

post image

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அனிமல் படத்தைத் தொடர்ந்து சந்தீப் வாங்கா இயக்கி வரும் படம் ‘ஸ்பிரிட்’. பிரபாஸ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.

'ஸ்பிரிட்' படம்
'ஸ்பிரிட்' படம்

2027-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “போலிச் செய்தி பரப்புபவர்களே, 'ஸ்பிரிட்' படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

அதற்குள்ளாகவே உங்கள் 'வாட்ஸ்அப் தொழிற்சாலைகள்' பல கதைகளை உருவாக்கி வருகின்றன. வாழ்க்கையில் முதிர்ச்சி அடையுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறது. இதன் மூலம் தான் இன்னும் படத்தில் நீடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' - இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்... மேலும் பார்க்க

``சினிமா துறையில் பாலியல் சுரண்டல் இல்லை; சொந்த தவறு.!" - சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை

சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'மன சங்கர வர பிரசாத் காரு' வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சிறப்பு தோற்றத்தில் வ... மேலும் பார்க்க

Chiranjeevi: "படம் பார்த்த அந்த ஜோடி விவாகரத்து முடிவை மாற்றியிருக்கிறார்!" - சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக... மேலும் பார்க்க