செய்திகள் :

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

post image

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

அந்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பு தளவாட தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

பந்த் போராட்டம்

அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ``மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரியில் சுமார் 5 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அனைத்து விஷயத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே அரசு செயல்படுகிறது.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒப்பந்த ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர்.

புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு நிரந்தரமான ஆணையர் நியமிக்கப்படவில்லை. இப்படி இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் கண்டித்துத்தான் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினர் பஸ், ஆட்டோ மற்றும் டெம்போ வாகனங்களை இயக்க மாட்டார்கள். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். அதேபோல தொழிற்பேட்டைகளும் முற்றிலும் இயங்காது.

மேலும் இந்தப் போராட்டத்திற்கு `இந்தியா' கூட்டணி ஆதரவு தெரிவித்திருக்கிறது. புதிய பேருந்து நிலையம், வில்லியனூர், அரியாங்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், சேதராப்பட்டு மற்றும் காரைக்கால் என ஒன்பது இடங்களில் நாளை மறியல் போராட்டம் நடைபெறும்" என்றார்.

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா?" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3' செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைம... மேலும் பார்க்க

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்‘வாவ்’ வியூகம் 5வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக' என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ள... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்க... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிர... மேலும் பார்க்க

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் ப... மேலும் பார்க்க