செய்திகள் :

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

post image

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.

அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.

ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்தி

மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன்.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது.

உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்" என்று பேசியிருந்தார்.

இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

அப்பதிவில், " மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று பதிவிட்டிருக்கிறார்

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிர... மேலும் பார்க்க

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் ப... மேலும் பார்க்க

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுக... மேலும் பார்க்க

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை' வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வர... மேலும் பார்க்க