புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள...
"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!
‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார்.
இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று ஜாஸ்மின் சாண்டல்ஸின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
மேடையில் அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே, இரு ஆண்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை கவனித்த அவர், உடனடியாக பாடுவதை நிறுத்தி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூறினார்.
மேடையில் அவர், “பாதுகாப்பு ஊழியர்களே, இந்த இரு நபர்களை உடனே அப்புறப்படுத்துங்கள். இவர்கள் பெண்களைத் தொல்லை செய்கிறார்கள். பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்” என்று திடமாகக் கூறினார்.
ஜாஸ்மின் சாண்டல்ஸின் இந்தக் கருத்துக்கு பார்வையாளர்கள் உரத்த ஆரவாரத்துடனும் கைதட்டல்களுடனும் பாராட்டு தெரிவித்தனர்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், பொழுதுபோக்கை விட பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜாஸ்மின் சாண்டல்ஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நிகழ்வு முடிந்ததும் மேடையில் அவர், “டெல்லியில் நிகழ்ச்சி நடத்துவது எப்போதும் வாழ்க்கையை மாற்றும் அனுபவம்.
ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் சிறப்பாக உணர்கிறேன். இந்த இரவு அழகானது. உங்களை நேசிக்கிறேன், டெல்லி!” என்று பேசினார்.




















