'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்' பாலிடிக...
Aamir Khan: "நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். ஏன் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
அவர் தனது உரையாடலில், "எனது குணம் என்னவென்றால், நான் என் படங்களில் மூழ்கிப்போனேன். நான் என் வேலைகளுக்கு அடிமையாகிப்போனேன். நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாகும். எப்போதெல்லாம் நான் அதிருப்தி அல்லது மன வருத்தத்திற்கு உள்ளாகிறேனோ அப்போதெல்லாம் 3-4 நாட்களுக்கு நான் யாரிடமும் பேச மாட்டேன்.
அந்த நேரத்தில் என்னை யாராலும் தொடர்பு கொள்ள முடியாது. நான் முழு அமைதியாகிவிடுவேன்'' என்று தெரிவித்தார்.
ஆமீர் கான் சமீபத்தில் தனது லைப் பார்ட்னர் கெளரியைத் திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அமீர் கானின் பேச்சு பேசுபொருளானது.
இது குறித்து பெங்களூரு வாசவி மருத்துவமனையின் மனநல ஆய்வாளர் சுபாஷ் ஹெச்ஜே கூறுகையில், ''உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, துணைவியாரின் தேவைகளுக்கு இடமளிக்காமல் இருந்தது, மோதல்களின்போது திடீரென விலகிக்கொள்வது போன்றவை மோசமான செயல்கள்.
அவை கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து வந்திருக்கலாம். இந்தப் பிரச்னை வெறுப்பால் உண்டாவதில்லை. ஆனால் அறியாமை, புறக்கணிப்பு மற்றும் மோசமான முன்னுரிமை காரணமாக உருவாகலாம்.
மோதல்கள் காதலுக்கு முடிவல்ல. உங்களது பார்ட்னரைப் புறக்கணிப்பது உங்கள் உறவைச் சரிசெய்ய உதவாது. இது ஒரு ஆரோக்கியமற்ற சுய-பாதுகாப்பு உத்தி. உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குங்கள், உங்களைத் தயார்படுத்தி, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.
'தவிர்த்தல் முறையில்' இருந்து 'பிரச்னைக்குத் தீர்வு முறை'க்கு மாறுங்கள். ஒருவர் தனது தவறை ஒத்துக்கொள்வது பிரச்னைக்குத் தீர்வு காண முதல் படிக்கட்டாக இருக்கும்" என்று சுபாஷ் கூறினார்.

















