Eggless Cakes: `சாக்லேட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் ப்ரேமாவின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாக ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில், "'சிக்கந்தர்' படம் குறித்து முருகதாஸ் சாருடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
ஆனால், பிறகு நடந்தவையெல்லாம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் ஸ்கிரிப்ட்டைக் கேட்டபோது, அது மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பொதுவாக சினிமாவில் இது போன்றவை நடப்பது வழக்கம்தான்.
ஒரு கதையை நாம் கேட்கும்போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கதை மாற்றங்கள் ஏற்படும்.
இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். 'சிக்கந்தர்' படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது." எனக் கூறியிருக்கிறார்.



















