Gold: "இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால்" - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்...
"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" - கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், " நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்.
செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள்.

செங்கோட்டையன் - டிடிவி தினகரன்
நான் டெல்லி சென்றபோது கூட 'செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்' என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
நான் இதை செங்கோட்டையனிடம் சொன்னேன். ஆனால் அவர் 'நான் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டேன். என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது' என்று சொன்னார்' மூத்த அரசியல்வாதியான அவரை வற்புறுத்துவதெல்லாம் சரியான விஷயம் கிடையாது" என்றிருக்கிறார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா?
தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், " மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் எப்படி திமுகவிற்கு போவார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

கூட்டணி ஆட்சி
தவிர கூட்டணி ஆட்சி குறித்து பேசிய டிடிவி தினகரன் , " தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இருப்பதாகத் தான் அரசியல்வாதிகளும், மூத்த பத்திரிகையாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டுமே. நிபந்தனை எதுவும் நான் விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.















