செய்திகள் :

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

post image

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு பஞ்சாப்பில் தங்களது கூட்டாளிகள் மூலம் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஒரு கபடி வீரர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது போன்ற காரணங்களால் மாநில அரசு வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் கிரிமினல்கள் மற்றும் அவர்களின் இந்திய கூட்டாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் 60 கேங்க்ஸ்டர்களின் 1,200 இந்திய கூட்டாளிகளை பஞ்சாப் அரசு அடையாளம் கண்டுள்ளது. இது தவிர வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் 60 கேங்க்ஸ்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் 600 பேரையும் பஞ்சாப் போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அதோடு அவர்கள் பஞ்சாப்பில் தங்கி இருக்கும் இடங்களையும் போலீஸார் கண்டுபிடித்து கண்காணித்து வருகின்றன்றனர்.

அவர்களில் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் கோல்டி பிரரின் பெற்றோர் சாம்சர் சிங், பிரீத்பால் கவுர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக உள்ளூர் குடும்பம் ஒன்று கடந்த ஆண்டு போலீஸில் புகார் செய்து இருந்தது. அப்புகாரின் பேரில் போலீஸார் முக்‌ஷார் மாவட்டத்தில் கோல்டி பிரர் பெற்றோரை கைது செய்துள்ளனர். 2022-ம் ஆண்டு பஞ்சாப் பாடகர் சிதுமூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு பொறுப்பேற்பதாக கோல்டி பிரர் வெளிப்படையாக அறிவித்தான். 2017-ம் ஆண்டு மாணவர் விசாவில் கனடாவிற்கு சென்ற கோல்டி பிரர் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடா என மாறி மாறி வசித்து வருகிறான்.

அவன் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் இருந்தான். ஆனால் கடந்த ஆண்டு முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறான். கடந்த 2024-ம் ஆண்டு அவனை மத்திய அரசு தீவிரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது... மேலும் பார்க்க

கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ... மேலும் பார்க்க

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

வேறொருவரை மணந்ததால் ஆத்திரம்; காதலனின் மனைவிக்கு HIV ரத்தம் செலுத்திய இளம்பெண்; அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம், கர்னூல் என்ற இடத்தை சேர்ந்தவர் வசுந்தரா(34). இவர் டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த டாக்டர் வசுந்தராவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் த... மேலும் பார்க்க