Iran நோக்கி விரையும் US படைகள் - Middle Eastல் போர் பதற்றமா? | Trump | Khamenei ...
திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!
பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான துரந்தர் படத்தில் நடித்துள்ள நதீம் கான் வீடு மும்பை வர்சோவா பகுதியில் இருக்கிறது.
மலாடு மால்வானி பகுதியை சேர்ந்த அப்பெண் பல ஆண்டுகளாக நதீம் கான் வீட்டில் வேலை செய்து வந்தார். அப்படி வேலை செய்த போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை பல்வேறு சந்தர்ப்பங்களில் நதீம் கான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நதீம் கான் வீட்டிலும், வீட்டு வேலைக்கார பெண்ணின் வீட்டிலும் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. முதன் முதலில் இச்சம்பவம் அப்பெண்ணின் மால்வானி வீட்டில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து கேட்டதற்கு நதீம் கான் தட்டிக்கழித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இதையடுத்து அப்பெண் வர்சோவா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சம்பவம் முதலில் மால்வானியில் நடந்திருந்ததால் வழக்கை மால்வானி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
மால்வானி போலீஸார் நதீம் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நதீம் கானுடன் தனக்கு முதல் முறையாக 2015ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டதாகவும், அத்தொடர்பு இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















