செய்திகள் :

"தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது" - சௌமியா அன்புமணி

post image

மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு, ஆனால், பெண்களுக்கு இங்கு மரியாதை இல்லை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 850 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலம் பெற்றுக்கொண்டது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

டாஸ்மாக் காலி மது பாட்டில்களைச் சேமித்து வைக்க குடோன் இருக்கும்போது விவசாயிகளின் மலர்களைச் சேமித்து வைக்க குடோன் இல்லை. மலர் விவசாயம் மட்டுமல்ல, தென்னை விவசாயம், மா விவசாயம் என எந்தவொரு விவசாய வளர்ச்சிக்கான கட்டமைப்பும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை.

மாவுக்கு மதிப்புக்கூட்ட இப்பகுதியில் தொழிற்சாலை இல்லை, ஆனால், இப்பகுதி இளைஞர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மா விவசாயமும் பெருமளவு குறைந்துவிட்டது.

மாவிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயர்த்தியதால்தான் நாம் அதைப் பயன்படுத்தி வருகிறோம். இல்லையென்றால் பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

மூன்று போகம் விளைச்சல் தரும் விளைநிலத்தைப் பறித்து தொழிற்சாலை அமைப்பது நல்லதல்ல. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், மாவட்டத்தில் பல பகுதிகளுக்குப் போய்ச்சேரவில்லை. அதேபோல் கிராமங்களுக்குச் சரியான பேருந்து வசதிகள் இல்லை, இந்தப் பகுதியில் கல்லூரிகள் கிடையாது.

கிரானைட் குவாரிகளில் வெடி வைப்பதால் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இக்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு அபராதத்தைக் கட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கும் கடனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுப்பது இல்லை.

மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பவர் அன்புமணி ராமதாஸ்.

நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும், அதை உணர்ந்து வாக்களியுங்கள். மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு புதிய மதுக்கடைகளைத் திறப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது" என்று பேசினார்.

"அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை" - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியு... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் ... மேலும் பார்க்க

"எங்களைப் பற்றி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால்" - டிடிவி தினகரன் காட்டம்

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, ”ஊழல் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி எங்க... மேலும் பார்க்க

"பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு" - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகி... மேலும் பார்க்க

"பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!"– முதல்வர் ஸ்டாலின் விளாசல்

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. கனிமொழி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற ... மேலும் பார்க்க